289 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Byadmin

Oct 18, 2023


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Tom Latham தலைமையிலான நியூசிலாந்து அணி, Hashmatullah Shahidi தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (18) நடைபெறுகிறது.

இந்த போட்டி சென்னை மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Naveen-ul-Haq, Azmatullah Omarzai தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

நியூசிலாந்து அணி சார்பில் Glenn Phillips 71 அதிகப்பட்ச ஓட்டங்களாக பெற்றார். அத்துடன் Tom Latham 68 ஓட்டங்களையும் Will Young 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 289 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *