நியூசிலாந்து அபார வெற்றி

Byadmin

Oct 5, 2023

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி, நடப்பு செம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அந்த அணிசார்பில் அதிகபடியாக, ஜோ ரூட் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், நியூசிலாந்து அணியின் மாட் ஹென்றி 48 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 283 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
அந்த அணிசார்பில் அதிகபடியாக, டெவோன் கொன்வே 152 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திர 122 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், இங்கிலாந்து அணியின் செம் கர்ரன் 47 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன்படி இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *