வௌ்ளிப் பதக்கம் பறிபோனது!
17 வருடங்களின் பின்னர் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.
400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்துகொண்ட இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத வெற்றி என போட்டி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
போட்டியில் இணைந்த இலங்கை அணி வீரர் ஒருவர் மற்றொருவரின் பாதையைத் தொட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானம் தொடர்பாக இலங்கை மேன்முறையீடு செய்துள்ளது.
இலங்கையின் 17 வருட பதக்க கனவு பறிபோனது!
