குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை?

ByEditor 2

Jul 18, 2025

பொதுவாக ஆண்கள் பலர், தன்னை அறியாமல் செய்யும் பல தவறுகள் அவர்களின் விந்தணுக்களின் தரத்தையும் ஆரோக்கியத்தையும் வலுவாக பாதிக்கும் என ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை? | How Much Sperm Is Enough To Get Pregnant

உதாரணமாக, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும்.

விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் விடயங்கள்

குறிப்பாக காஃபி, தேனீர்  அதிகமாக குடிப்பதும் விந்தணுவை குறைக்குமாம். கஃபைனால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மது அதிகமாக குடிப்பவர்களாலும் குழந்தை பெற்றுக்கொள்ள ஏற்ற விந்தணுக்களை பெற முடியாமல் போகிறதான ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. மது அருந்துவதால்,  ஹார்மோனில் ஏற்படுத்தும் மாற்றங்களால் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுகின்றது.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை? | How Much Sperm Is Enough To Get Pregnant

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு மில்லி லிட்டர் விந்துவில், சுமார் 1.5 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டியது அவசியம். இதைவிட குறைவாக இருந்தாலும் தந்தை ஆகலாம். ஆனால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் போது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளும் வலுவாக குறையும்.

மது அருந்துதல் புகைபிடித்தல் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைகள் உட்பட உடலுக்கு அதிகமாக வேலை கொடுக்காமல் இருப்பதும்,  உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் கூட விந்தணுக்களின் உற்பத்தியிலும் தரத்திலும் தாக்கம் செலுத்தும்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை? | How Much Sperm Is Enough To Get Pregnant

ஆண்கள், பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடும் வழக்கம் அதிகமாகியிருப்பதாக கூறப்படுகிறது.பர்கர், சிப்ஸ், பீட்ஸா உள்ளிட்ட பல கொழுப்பு நிறைந்த சர்க்கரை மற்றும் தேவையற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும்  இந்த பாதிப்பு ஏற்படலாம்.

குறிப்பாக இதில் சுவைக்காக கலக்கப்படும் பல ரசாயனங்கள் விந்தணுக்களை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை? | How Much Sperm Is Enough To Get Pregnant

பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

மன அழுத்தம் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் உடல் பருமன் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும், எனவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு எத்தனை உயிரணுக்கள் தேவை? | How Much Sperm Is Enough To Get Pregnant

ஆண்கள் வாழ்வியல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே, ஆரோக்கியமான விந்தணுக்களை பெற முடியும். ஆரோக்கியமான உணவுமுறை, தேவையான அளவு உடற்பயிற்சி மற்றும் போதிய தூக்கம் என்பன இன்றியமையாதது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *