சுவிட்ச் பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா

ByEditor 2

Jul 23, 2025

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் ஜூலை 12ஆம் திகதியன்று ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது.

இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்​லைனர் விமானங்​களின் இன்​ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்​டும் என்று அனைத்து விமான நிறு​வனங்​களுக்​கும் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், ‘‘அனைத்து போயிங் விமானங்​களி​லும் எரிபொருள் கட்​டுப்​பாட்டு சுவிட்ச் அமைப்​பு​களை ஆய்வு செய்​து​விட்​டோம். இதில் எந்​தப் பிரச்​சினை​யும் கண்​டறியப்​பட​வில்​லை’’ என ஏர் இந்​தியா அதி​காரி தெரி​வித்​தார்​.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *