இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி

ByEditor 2

Jul 14, 2025

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.அந்த அணி சார்பில் அணித்தலைவர் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், ஷமீம் ஹொசைன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் பினுர பெர்ணான்டோ 3 விக்கெட்டுகளையும் நுவான் துஷார மற்றும் மஷீஷ் தீக்‌ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.அதன்படி, 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 32 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், தசுன் சானக்க 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரிஷாட் ஹொசைன் 3 விக்கெட்டுக்களையும், இஸ்லாம் மற்றும் Mohammad Saifuddin ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.பங்களாதேஷ் அணியின் இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *