ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ByEditor 2

Jul 14, 2025

எட்டிபொல, கல்தொர ஹேன பகுதியில் நேற்று (13) கூரிய ஆயுததத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யடவத்த பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் 45 வயதுடைய வாலவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதோடு, கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

கொலையுடன் தொடர்புடைய நபர் 60 வயதுடையவர் எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யடவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *