யூரிக் அமிலம்
இன்றைய நவீன உலகில் பலரும் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுமுறையும், வாழ்க்கை முறையும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் எனப்படும் புரதங்களின் முறிவால் உடலில் உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும். நமது உடலில் சரியான அளவில் யூரிக் அமிலம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் மூட்டு வலி வீக்கம், நடப்பதில் சிரமம், சிறுநீரக கற்கள், சோர்வு, பசியின்னை பிரச்சனை ஏற்படுகின்றது.
உணவு பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்தாமல் இருந்தால், நீரிழப்பு ஏற்படுவதுடன், யூரிக் அமிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.
இந்த சூழ்நிலையில் யூரிக் அமிலத்தின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும் பானங்களை குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை நீர்
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிப்பது சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை நீக்குவதுடன், யூரிக் அமிலத்தையும் கட்டுக்குள் வைக்கின்றது.

மஞ்சள் பால்
மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற கலவை உடலில் வீக்கத்தை குறைத்து, யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடித்தால் நன்மை அளிக்கும்.