புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்

ByEditor 2

Jun 30, 2025

புதிய பொலிஸ் துறை ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சட்டத்தரணி எஃப்.யு.வூட்லர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று திங்கட்கிழமை (30) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் முன்னர் பொலிஸ் துறை ஊடகப் பிரிவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இதற்கிடையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *