உப்பு விடயத்தில் சட்ட நடவடிக்கை

ByEditor 2

Jun 30, 2025

சில இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர் அல்லது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் சில்லறை விலை குறிப்பிடப்படாத உப்பு பொதிகளை சந்தையில்,  விநியோகித்துள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான உற்பத்திகளை கொள்வனவு செய்யவோ விற்பனை செய்யவோ வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொருட்களை விநியோகிக்கும் இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் சரியான தகவல்கள் மற்றும் விலை விபரங்கள் அடங்கிய முறையான விலைப்பட்டியல்களை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென வர்த்தகர்களுக்கு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு விலைப்பட்டியல் இன்றி பொருட்களை தம்வசம் வைத்திருக்கும் வர்த்தகர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *