மீனவர்களை தேடும் பணி: பீச்கிராஃப்ட் விமானம் ஈடுபாடு

ByEditor 2

Jun 29, 2025

தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத் தேடுவதற்காக விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது சுமார் ஒரு மணி நேரமாக அந்த விமானம் மூலம் காணாமற்போன இரு மீனவர்களைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப் படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளாகும்போது, அதில் ஆறு மீனவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *