150 ஓட்டங்களை கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

ByEditor 2

Jun 27, 2025

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

இலங்கை அணி தற்போது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 150 ஓட்டங்களை கடந்துள்ளார். 

அவர் தற்போது 254 பந்துகளுக்கு முகம் கொடுத்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

ஆடுகளத்தில் தற்போது பெத்தும் நிஸ்ஸங்கவுடன், துடுப்பாடி வரும் பிரபாத் ஜயசூரிய 8 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

இலங்கை அணி தற்போது 3 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

முன்னதாக பங்களாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 247 ஓட்டங்களை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *