தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் தற்போது பெற்றுள்ளது.
தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக கையகப்பற்றப்பட்ட 151 நிறுவனங்கள் உட்பட 200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ளது.
அத்துடன் இன்று (24) ஐக்கி மக்கள் சக்தியால் கையகப்பற்றப்பட்ட கம்பளை நகர சபை மற்றும் பெந்தோட்டை பிரதேச சபையுடன், அக்கட்சி கைப்பற்றியுள்ள மொத்த உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 27 ஆகும்.
இலங்கை தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
அதேநேரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தலா 3 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியால் எந்தவொரு நிறுவனத்தின் அதிகாரத்தையும் பெற முடியவில்லை.
இதற்கிடையில், சுயேச்சைக் குழுக்கள் உட்பட சில கட்சிகள் 12 உள்ளூராட்சி நிறுனங்களின் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.
உள்ளூராட்சி நிறுவனங்களை கைப்பற்றிய திசைக்காட்டி
