மூச்சு விட கஷ்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம், மீசாலை கிழக்கு, மீசாலையைச் சேர்ந்த திலக்சன் திசாரா என்ற 8 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மேற்படி குழந்தையை அழைத்துக் கொண்டு முழங்காவில் உள்ள உறவினர் வீடு ஒன்றுக்கு பொற்றோர் சென்றிருந்தபோது அங்கு குழந்தை மூச்சு விட கஷ்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநெச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தை நேற்று திங்கள் கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.