வீதி விபத்துக்களில் 2,000 பேர் பலி

ByEditor 2

Jun 20, 2025

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துகள், வீதிகளுக்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் ஒழுங்கற்ற சாரதிகளால் ஏற்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுபகொட சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு (2024) வீதி விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் தவிர, 7,152 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவித்தார். 

“2025 ஜனவரி 1 முதல் ஜூன் 15 வரையான 6 மாதங்களில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய 1,133 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலையாகும். கடந்த 30 ஆண்டு உள்நாட்டுப் போரில் சுமார் 28,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உள்ள கடுமையான நிலைமை என்னவென்றால், ஒவ்வொரு காலையும் தங்கள் கடமைகளுக்காக வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் 7 பேரின் உயிரற்ற உடல் மட்டுமே வீடு திரும்புகிறது.” 

மேலும் கருத்து வெளியிட்ட இந்திக ஹபுபகொட, 2025 ஜூலை 1 முதல் வாகனங்களில் பொருத்தப்பட்ட தேவையற்ற உதிரி பாகங்கள் கட்டாயமாக அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *