வாட்ஸ் அப் – ஸ்டேடஸில் புதிய அப்டேட்

ByEditor 2

Jun 18, 2025

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது.

அதன்பிறகு பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் மேற்கொண்டு வருகிறது. முதலில் குறுஞ்செய்தி மட்டும் பகிரும் வசதி இருந்தது.

அதன்பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதி கொண்டு வரப்பட்டது.

அதேபோல, 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிரும் வசதியையும் வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ் அப்பின் இந்த ஸ்டேட்ஸ் வைக்கும் வசதியை பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்களை ஒளிபரப்ப வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு நடுவே விளம்பரங்கள் வருவது போல வாட்ஸ் அப் ஸ்டேடஸ்க்கு நடுவிலும் விளம்பரங்கள் தோன்றும்.

தனிப்பட்ட சாட்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *