யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கஞ்சாவுடன் ஒருவரும், போதை மாத்திரைகளுடன் இருவரும் என மொத்தமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தில்ருக் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராமநாயக்க அவர்களின் தலைமையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் சிறிமாவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.