ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இங்கு தலைமை உரை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதார மாற்றம், முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் அபிவிருத்தி திறன்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
குறிப்பாக தற்போதைய உலகளாவிய பொருளாதாரப் போக்குகளின்போது, இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையில் விசேட கவனம் செலுத்தப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.