2 கொவிட் மரணங்கள் பதிவு

ByEditor 2

Jun 12, 2025
A healthcare worker places a test swab into solution for a PCR Covid-19 test at a Reliant Health Services testing site in Hawthorne, California on January 18, 2022. (Photo by Patrick T. FALLON / AFP) (Photo by PATRICK T. FALLON/AFP via Getty Images)

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழதுள்ளதாக மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில், இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம். இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கு வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன. அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *