சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

ByEditor 2

Jun 12, 2025

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அவர் தனது தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாடு முழுவதும் சிறைச்சாலை ஆணையாளர்கள் பதவிகளில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *