உள்ளூராட்சி அதிகார சபைகளில் கழிவுகளை சேகரித்தல் மற்றும் போக்குவரத்துச் செய்வதற்காக 16 கழிவுப் போக்குவரத்து கம்பக்டர் ஊர்திகளைக் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைப் போலவே இலங்கையும் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவம் தற்போது சவால் மிக்க கடினமான விடயமாக மாறியுள்ளது.
அதற்கமைய, நகரக் கழிவு முகாமைத்துவத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி 16 கழிவுப் போக்குவரத்து கம்பக்டர் ஊர்திகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.