இலங்கையின் சித்த மருத்துவ வரலாற்றில் முக்கியமான மருத்துவர். நா.வர்ண குலேந்திரன் அவர்களை, சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முதலாவது பேராசிரியர் நியமனம் சித்த மருத்துவத்தின் தந்தையான அகத்தியர் வாழ்ந்த இடமான தென்கலையாக திருகோணமலையில் , இது கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ பீடத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் சித்த மருத்துவ பீடம் 2011 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நியமனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றமாகாக பார்க்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ கற்கை நெறியை உருவாக்குவதில் பேராசிரியர்.நா. வர்ண குலேந்திரன் பாடுபட்டார். சித்த மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சேவைகள் இந்த நியமனத்தின் மூலம் புதுப் புள்ளியில் நுழைகின்றன.
பேராசிரியர் நா.வர்ண குலேந்திரன் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பு, இத்துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினருக்கு தூண்டுகோலாக அமையும். இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகம் சித்த மருத்துவத்தில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மற்றும் சர்வதேச மையமாக வளரும் பாதையில் முக்கியமான முன்னேற்றத்தைக் கொண்டு வரும் வகையில் இந்த நியமனம் எடுத்துக் காணப்படுகிறது.
