பாராளுமன்றத்தில் மரநடுகை நிகழ்வு

ByEditor 2

Jun 5, 2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு  பிரதமர்  ஹரினி அமரசூரிய மற்றும்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் புதன்கிழமை  (05) பாராளுமன்ற வளாகத்தில் மரநடுகை நிகழ்வொன்று இடம்பெற்றது.

 பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க,  எதிர்க்கட்சிகளின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக,  பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசத்த.த சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேவர்தன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன, உணவு வழங்கல் வீட்டுப் பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ராஜ் எதிரிசிங்க உள்ளிட்ட திணைக்களங்களின் பிரதானிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *