மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ByEditor 2

Jun 4, 2025

வௌ்ளவத்தையில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை, ராம கிருஷ்ணா பிளேஸில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா (59) ஆவார். இவர் மட்டக்களப்பு இருதய புரத்தைச் சேர்ந்தவர்.

வெள்ளவத்தை ராம கிருஷ்ணா பிளேஸ் வணிக இல்லத்தில் காவலாளியாகவும், வீட்டுப் பணியாளராகவும் பணியாற்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த இவர்.

 மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் மரக் கைப்பிடியால் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ​​சமநிலையை இழந்து திடீரென கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *