எருமை பால் தயிர் VS பசும் பால் தயிர்… எது ஆரோக்கியம்?

ByEditor 2

Jun 4, 2025

பொதுவாகவே பாலும் பால் பொருட்களும் மிகவும் ஆரோக்கியம் நிறைந்து என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்காது. இது கல்சியத்தின் சிறந்த மூலமாகும், இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமானது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் பால் குடிக்க வேண்டும் அல்லது தயிர் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் பசுவிற்கும் எருமைக்கும் இடையில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் போது, எது சிறந்தது என சந்தேகம் எழுவது இயல்பு தான்.எது உடலிற்கு மிகவும் சிறந்தது என்பது பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எது ஆரோக்கியம் நிறைந்தது?

தயிர் என்றாலே உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது தான் என்றாலும் ஒப்பீட்டளவில் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிரை விட எருமைத் தயிரில் அதிக புரதம், கொழுப்பு, கால்சியம், விட்டமின்கள் ஆகியன காணப்படுகின்றது.

பசும்பாலை விட எருமைப்பாலில் 10-11 சதவீதம் அதிக புரதம் செரிந்து காணப்படுகின்றது.  இது அதிக வெப்பத்தை எதிர்க்கும் தன்மை கொண்டது. 

எருமை பால் தயிர் VS பசும் பால் தயிர்... எது ஆரோக்கியம்னு தெரியுமா? | Cow Milk Curd Vs Buffalo Milk Curd Which Is Good

இதில் உள்ள புரதத்தின் அளவு காரணமாக, பச்சிளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எருமை பால் பரிந்துரைக்கப்படுவது கிடையாது.

எருமை தயிரில் காணப்படும் அதிகப்படியான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு உறுதி அடையவும், பல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. தயிரில் இயற்கையான புரோபயாடிக் உள்ளதால் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தகின்றது.

எருமை பால் தயிர் VS பசும் பால் தயிர்... எது ஆரோக்கியம்னு தெரியுமா? | Cow Milk Curd Vs Buffalo Milk Curd Which Is Good

கோடை  காலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

மேலும் எருமைத் தயிர் பசு தயிரை விட  நீண்ட நேரம் வரையில்  நிறைவுணர்வை கொடுக்கும்அதனால் இதை எடுத்துக் கொள்வதால் அதிக உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியும். குறிப்பாக உடல் எடையை கட்டுக்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு எருமை தயிர் சிறந்த தெரிவாக இருக்கும். 

எருமை பால் தயிர் VS பசும் பால் தயிர்... எது ஆரோக்கியம்னு தெரியுமா? | Cow Milk Curd Vs Buffalo Milk Curd Which Is Good

எருமைத் தயிரில் உள்ள விட்டமின்கள் (A, B12) மற்றும் சத்துகள், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது.

எருமைத் தயிரில் தோல் மற்றும் முடி நலத்திற்கு தேவையான விட்டமின் E, சிங்க், மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தோல் பிரச்சனைகளை குறைக்க உதவும் எனவே ஒப்பீட்டு ரீதியில் பசும் பால் தயிரை விடவும் எருமை பால் தயிர் சிறந்ததாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *