நாடு திரும்பினார் அனுதி குணசேகர

ByEditor 2

Jun 2, 2025

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். 

கடந்த மே 31 அன்று இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது. 

உலகம் முழுவதிலுமிருந்து 108 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த உலக அழகி போட்டியில், கடந்த சில நாட்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகரவுக்கு முதல் 40 பேருக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதனால், இலங்கையின் உலக அழகி கனவு தகர்ந்தது. 

72வது உலக அழகி போட்டியில் அனுதி குணசேகர கடந்த நாட்களில் நடந்த போட்டிகளில் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி, ஹெட்-டு-ஹெட் மற்றும் மல்டிமீடியா பிரிவுகளில் இறுதி சுற்றுகளுக்கு தகுதி பெற்றிருந்தார். 

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இந்தப் பிரிவுகளில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இலங்கைப் போட்டியாளராக அனுதி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *