கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகில் வீதியில் பயணித்த கார் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததால் காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் மரங்கள் முறிந்து விழுவதால் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.