2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலத்தை நீட்டிப்பதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மறு திருத்தக் கோரிக்கைகளுக்காக இன்று புதன்கிழமை (28) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒன்லைன் விண்ணபப்பத்தை மீண்டும் திறப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆரம்பக் காலத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஏராளமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.