உணவகத்தில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்!

ByEditor 2

May 27, 2025

கண்டி – கம்பளை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புழுக்கள் நிறைந்திருந்த 700 முட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முட்டைகள் காலாவதியானவை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த உணவகத்தில் கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *