இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று

ByEditor 2

May 26, 2025

 இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட் – 19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 1,009 பேர் பாதிப்பு

மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஆம் 22 திகதி தானேயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே பெங்களூருவில் கடந்த 24 ஆம் திகதியும் ஒருவர் கொரோனா வைரஸால் உயிர்ழந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த வார இறுதியில் சுகாதார அமைச்சகம் கொரோனா பாதிப்புகளை மதிப்பாய்வு செய்து, முக்கியமாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளதாகக் கூறியது.

தற்போது இந்தியா முழுவதும் 1,009 பேர்கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 430 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் மே 19 முதல் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் தற்போது 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 153 பேர் கடந்த வாரம் முதல் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த வாரத்தில் நான்கு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். டெல்லியில் தற்போது பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *