கொத்துக் கொத்தாக உயிரிழந்த கிளிகள்

ByEditor 2

May 26, 2025

இந்தியாவின் உத்தரப் பிரதேசம், ஜான்சி அருகெ கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கடுமையான புயலால் 100-க்கும் மேற்பட்ட கிளிகள் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புயலின் கோரத் தாண்டவம்

புயலின் கோரத் தாண்டவத்திற்குப் பிறகு, கிராமத்தின் பல்வேறு பகுதிகளில், மரங்களின் அடியிலும், இடிந்த கட்டிடங்களுக்கு அருகிலும் நூற்றுக்கணக்கான கிளிகள் இறந்து கிடப்பது நெஞ்சை உலுக்குகிறது.

சில கிளிகள் மரக் கிளைகளில் தலைகீழாகத் தொங்கியபடியும், சில மின் கம்பிகளில் சிக்கியபடியும் இறந்துள்ளன. இந்தப் பறவைகளின் திடீர் உயிரிழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *