சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட; ஆரோக்கியமான பழக்கங்கள்

ByEditor 2

May 22, 2025

இளைஞர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு அவர்களின் மோசமான வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணம்.

25-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட காரணம் அவர்களின் முறையற்ற உணவுப் பழக்கம்.மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் துரித உணவு உண்ணுதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இதில் அடங்கும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள 5 பழக்கங்களைப் பின்பற்றலாம்.

சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட தினமும் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள் | Daily Healthy Habits To Control Diabetes Naturally

 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பழக்கங்கள்

1. ஒரு வாரத்தில் குறைந்தது 2000 கலோரிகளை எரிக்கவும்: உடற்பயிற்சி செல்களின் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு வாரமும் 2000 கலோரிகளை எரிக்கக்கூடிய உடற்பயிற்சியைச் செய்யுங்கள். விறுவிறுப்பான நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவற்றை கடைபிடிக்கலாம்

2. துரித உணவுகளை தவிர்ப்பது அவசியம் :  வேகமாக ஜீரணமாகும் கார்போஹைட்ரேட்டுகளை அதிகமாக கொண்ட உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 40% அதிகம் என்பது பல ஆய்வுகளில் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம் எனவே மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படும் துரித உணவுப் பொருட்களான வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்றவை ஊட்டச்சத்துக்கள் இல்லாதவை.  எனவே அத்தகைய பொருட்களை வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட தினமும் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள் | Daily Healthy Habits To Control Diabetes Naturally

3. தினமும் 25 கிராம் நார்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் : வயது வந்தவர்கள் தினமும் தங்கள் உணவில் 25 கிராம் நார்ச்சத்து சேர்க்க வேண்டும். இதற்கு, நீங்கள் பச்சை பட்டாணி, முழு தானியங்கள், சியா விதைகள் ஆப்பிள் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம். அதிக நார்ச்சத்து உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்கவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

4. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5-7 நிமிடங்கள் நடக்கும் பழக்கம் :  தினமும் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 91% அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட தினமும் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள் | Daily Healthy Habits To Control Diabetes Naturally

5. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில பானங்கள்: தினமும் டீ காபிக்கு பதிலாக ஆரோக்கிய பானங்களை அருந்துவது பலன் தரும். பிளாக் காபி குடிப்பதால் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 8% குறைகிறது.கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் எனப்படும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர மெட்டபாலிஸத்தை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தும், சீரக நீர், இலவங்கபட்டை ஆகியவையும் பலன் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *