இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

ByEditor 2

May 19, 2025

16 வதுபோர் வீரர்கள் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு,இன்று (19) முதல் அமலுக்கு வரும் வகையில், 10,093 ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்லசந்த ரோட்ரிகோ வின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்தது.

இப் பதவி உயர்வு களின்படி, வாரண்ட்அதிகாரி II தரத்தில் உள்ள 225 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள்வாரண்ட் அதிகாரி I தரத்திற்கும், ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்தில்உள்ள 816 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள்வாரண்ட் அதிகாரி II தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மேலும்,சார்ஜென்ட் தரத்தில் உள்ள 1191 மூத்த ஆணையிடப்படாத அதிகாரிகள்ஸ்டாஃப் சார்ஜென்ட் தரத்திற்கும், கார்ப்ரல் தரத்தில் உள்ள 2302 ஆணையிடப்படாத அதிகாரிகள் சார்ஜென்ட் தரத்திற்கும்,

லான்ஸ் கார்ப்ரல் தரத்தில்உள்ள 3468 ஆணையிடப்படாத அதிகாரிகள் கார்ப்ரல் தரத்திற்கும், 2091 சாதாரண வீரர்கள் லான்ஸ்கார்ப்ரல் தரத்திற்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *