மட்டக்களப்பு பாடசாலை அதிபரின் செயல்

ByEditor 2

May 17, 2025

மட்டக்களப்பு பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய அதிபரின் செயல் குறித்து சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றிய சமூகவலைத்தள பதிவு ஒன்று தற்போது அதிகம் பரவப்பட்டு வருகின்றது.

அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அவர் ஒரு அதிபராக மட்டுமன்றி, நாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்புள்ள ஒரு தந்தையாக, ஒரு சமூக சேவகனாக வீதியில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சீர்செய்து தன் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாத்த அந்தப் புகைப்படம் வைரலாகப் பரவியது.

பதவிக்காகவும் புகழுக்காகவும் அல்லாமல், தன் கடமையை உணர்ந்து அவர் செய்த அந்தச் செயல், ஒவ்வொரு தலைவனும் பின்பற்ற வேண்டிய உதாரணம்.

மட்டக்களப்பு பாடசாலை அதிபரின் செயல் ; சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் | Principal S Action Photo Goes Viral Social Media

“ஒரு நேர்மையான அரசு ஊழியரால் அரசியலில் பணக்காரர் ஆக முடியாது, சேவையின் மூலம் அவரால் மேன்மையையும் திருப்தியையும் மட்டுமே அடைய முடியும்.

” அவர் உணர்த்தும் உண்மை என்ன? நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் எதிர்கால சந்ததிக்காகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே அது. பதவிகள், அந்தஸ்துகள் ஒரு பொருட்டல்ல. நம் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களின் நல்வாழ்வு தான் முக்கியம்.

“கல்வி என்பது நீங்கள் உலகை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம்.” அந்த ஆயுதத்தை ஏந்தும் ஆசிரியர்களை நாம் மதிக்க வேண்டும்.

அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதே நேரத்தில், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால், நாம் ஒருபோதும் ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைகூறக் கூடாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் பார்ப்பது போல், ஒரு சிலரின் தவறுகளுக்காக அனைவரையும் எடைபோடுவது நியாயமற்றது.

நாம் பார்க்க வேண்டியது, பெரியகல்லாறு அதிபரைப் போன்ற நல்ல உள்ளங்களை. அவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து, அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள்.

அவர்கள் தான் நம் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இறுதியாக நான் சொல்ல விரும்புவது இதுதான். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், நமது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். நாளைய தலைமுறை நம்மைப் பார்த்து பெருமை கொள்ளும். என இப்பதிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *