வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திடீர் மாற்றம்! 

ByEditor 2

May 16, 2025

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகிர்வுக்கு ‘அனுமதி பகிர்வு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த விரிவான தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

வாட்ஸ் அப்

இன்றைய காலத்தில் மொபைல் வைத்திருப்பவர்கள் கட்டாயம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தவும் செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்தாலும் நேரடியாக பேசுவது போன்று வாட்ஸ் காலில் பேசலாம்.

வெறும் குறுஞ்செய்திகளாகத் தொடங்கிய வாட்ஸ்அப், இப்போது அழைப்புகள், குழு அழைப்புகள் மற்றும் குழு உரையாடல்கள் வரை பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதும் இதில் மிகவும் பொதுவான விஷயமாகிவிட்டது.

பல புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், காணொளி அழைப்புகள் முதல் பண பரிவர்த்தனை வரை அனைத்தையும் எளிதில் செய்ய முடிகின்றது. 

Whatsapp: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திடீர் மாற்றம்! வெளியான புதிய அம்சம் என்ன? | Whatsapp Makes Status Sharing Easy New Allow

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் – அனுமதி பகிர்வு

இந்த புதிய அம்சம், மற்றவர்களின் ஸ்டேட்டஸ்களை பயனர்கள் தங்கள் சொந்த ஸ்டேட்டஸ்களாக மீண்டும் பகிர அனுமதிக்கிறது. ஆனால், ஸ்டேட்டஸை முதலில் பதிவிட்டவர் ‘அனுமதி பகிர்வு’ விருப்பத்தை இயக்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Whatsapp: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திடீர் மாற்றம்! வெளியான புதிய அம்சம் என்ன? | Whatsapp Makes Status Sharing Easy New Allow

நண்பர்களுக்கு இடையே தகவல்களை விரைவாகப் பரப்புவதற்கு இந்த மீண்டும் பகிரும் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒருவரின் ஸ்டேட்டஸை மீண்டும் பகிர, அந்த ஸ்டேட்டஸைப் பார்க்கும்போது, ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்கள் ‘அனுமதி பகிர்வு’ என்ற ஆப்ஷனை  இயக்கியிருக்க வேண்டுமாம்.

Whatsapp: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திடீர் மாற்றம்! வெளியான புதிய அம்சம் என்ன? | Whatsapp Makes Status Sharing Easy New Allow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *