சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா? என்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுநீரில் நுரை
பொதுவாக ஆண் மற்றும் பெண்கள் இருவருக்கும் சிறுநீரானது மஞ்சள் கலந்த வெளிறிய நிறத்தில், நுரையில்லாமல் வருவது இயல்பான ஒன்றாகும்.
எப்போதாவது சிறுநீரில் நுரை காணப்பட்டால் பதற்றப்பட தேவையில்லை. ஆனால் அதிகமான நேரங்களில் சிறுநீர் நுரையாக வந்தால் அதனை கட்டாயம் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு சிறுநீரில் நுரை வருவதற்கு காரணம், தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பதுடன், சிறுநீரில் அதிகளவு புரதம் கலந்து வெளியாவதும் காரணமாக இருக்கும்.

ஆனால் சில நேரங்களில், சிறுநீரக சிக்கல்கள், நீண்ட நாள் சர்க்கரை நோய், கல்லீரல் பிரச்சனைகள், புராஸ்டேட் சுரப்பி தொடர்பான பிரச்சனைகள், அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மேலும், கை, கால், முகம் வீக்கம், உடல் நலம் குறைதல், பசியின்மை, வாந்தி, தூக்கமின்மை, சிறுநீரின் அளவில் மாற்றங்கள் போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

தீர்வுக்காக தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்தல், சத்தான உணவு, உப்பு மற்றும் புரத அளவை சமநிலையில் வைத்தல் போன்றவை முக்கியம்.