நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறை

ByEditor 2

May 14, 2025

நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறையைக் குறைக்க, மருந்துகளின் பாதுகாப்பு இருப்பை பராமரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

டெண்டர் இரத்து மற்றும் தர ஆய்வுகளைத் தொடர்ந்து மருந்துப் பொருட்கள் நிராகரிக்கப்பட்டமை போன்ற தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மாதங்களில் மருந்து பற்றாக்குறைக்கு இந்தப் பிரச்சினைகள் முக்கிய பங்களிப்பாக உள்ளன.

டாக்டர் விஜயமுனியின் கூற்றுப்படி, திட்டமிடப்பட்ட அவசரகால இருப்பு ஆறு மாத காலத்திற்கு நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும்.

நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் அரசாங்கம் நேரடியாக மருந்துகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுபோன்ற இடையக இருப்பைப் பராமரிப்பதன் மூலம், திறந்த சந்தையில் இருந்து மருந்துகளை வாங்குவதன் மூலம் தற்போது ஏற்படும் கூடுதல் செலவுகளையும் கணிசமாகக் குறைக்க முடியும். 

இந்த முயற்சியை முறைப்படுத்தி செயல்படுத்த விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேலும் விளக்கியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *