கொழும்பு – தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவில பட்டுமக பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.
தெமட்டகொடை மஹவில பட்டுமக பிரதேசத்தில் பலத்த காயங்களுடன் நபரொருவர் விழுந்து கிடப்பதாக தெமட்டகொடை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த நபரை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெமட்டகொடை மேம்பாலத்திற்கு அருகில் தங்கியிருந்த நிரந்தர வசிப்பிடம் இல்லாத ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.