கொத்மலை பேருந்து விபத்து

ByEditor 2

May 11, 2025

கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து, நுவரெலியா – கம்போல பிரதான வீதி  கொத்மலை, ரம்பொட  பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்ததாக கொத்மலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது,   சிலரின்  உடல்கள் பேருந்தின் அடியில் சிக்கப்பட்டுள்ளதாகவும்  குறித்த சடலங்களை மீட்க பொலிஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். 

இறந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட 12 ஆண்கள் உள்ளடங்குவதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று அதிகாலை   4:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.  குறித்த பேருந்தில் சுமார் 75 பயணிகள் பயணம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர், மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்து தொடர்பாக விசாரணை நடத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பிரசன்ன குமார குணசேகரவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *