குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

ByEditor 2

May 10, 2025

போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

இந்த மரணம் தொடர்பில் இன்று சனிக்கிழமை கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *