இந்த வருடத்தின் ஜனவரி முதல் மே மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனை, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன், 43 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 94 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டி உள்ளது.