நமது உடலை நாம் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். நம் உடலை நாம் நேசிக்கும் போது மட்டுமே அது அழ பெறும். உடலை அதன் எல்லா விதமான தோற்றத்திலும் நேசிக்க வேண்டும்.
இதற்காக நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும். மேலும் பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
பசி அடங்கும்போது சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இப்படி நம் உடலை நாம் நேசிப்பதற்கு பலவற்றை செய்யலாம்.
ஆனால் இதையெல்லாம் மீறுபவர்கள் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இது நம் செயல் மூலம் தான் வருகிறது.

இதற்கு டயட் இருந்து கஷ்டப்படுவதை விட இயற்கையில் சில விடயங்களை செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை எளிதில் குறைக்க
நாம் நாளுக்கு நாள் பயன்படுத்தும் சக்கரை நமது உடல் எடையை வேகமாக அதிகரிக்கும். எனவே உணவு திட்டத்தில் சர்க்கரையை எடுத்து கொள்வதை குறைப்பது தொப்பை கொழுப்பைக் குறைக்க முக்கியமான வழியாகும்.
நீங்கள் சர்க்கரை கலந்த பானங்கள் தவிர்த்து தண்ணீர், இனிப்பு இல்லாத தேநீர் அல்லது கருப்பு காபியை உணவு வழக்கத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் கடையில் வாங்கும் உணவுகளின் பின்னே உள்ள லேபிள்களை படித்து அதில் மறைக்கப்பட்ட சர்க்கரை இருந்தால் அந்த பொருட்களை வாங்கி உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

இனிப்பு சாப்பிட உங்களுக்கு ஆசை இருந்தால் பழங்கள் வாங்கி அதை பிடித்தவாறு செய்து உண்ணலாம். மிகவும் முக்கியமாக சத்தான உணவுகளை உண்பது நல்லது.
கிரீன் டீ: கிரீன் டீயில் உள்ள EGCG என்ற எபிகல்லோகேடசின்-3-கேலேட் கொழுப்பு குறைய உதவும்.
ஒமேகா-3 நிறைந்த மீன்: இந்த மீன் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பைக் குறைக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர்: உணவுக்கு பின் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடித்தால் எடை குறைய உதவுகிறது. ஜப்பானில் இந்தப் பழக்கம் உள்ளது.
மற்ற உணவுகள்: மிளகாயில் உள்ள கேப்சைசின் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தக் கூடியது. ஆலிவ் எண்ணெய், முட்டைகளும் நல்லது.