கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு விளக்கமறியல்

ByEditor 2

May 6, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மேலும் 6 மாணவர்கள் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தற்போது, மேலும் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மே மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 10ஐ எட்டியுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *