கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா?

ByEditor 2

May 6, 2025

அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கண் பிரச்சனை

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் கணினியில் தான் வேலை செய்து வருகின்றனர். அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலை செய்வதால், கண் அழற்ச்சி பிரச்சனை ஏற்படுகின்றது.

அதாவது கண் எரிச்சல், சிவப்பாக மாறுதல், அரிப்பு, மற்றும் பார்வையில் சிரமம் போன்றவை ஏற்படலாம். இது பொதுவாக கண்ணீர் குறைவாக உற்பத்தியாகும் அல்லது வேகமாக ஆவியாகி விடுவதால் ஏற்படுகிறது.

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்குத்தான் | Dry Eyes From Screen Time Causes Simple Remedies

குறிப்பாக, ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பது, டிஜிட்டல் திரையை தொடர்ந்த நேரம் பார்ப்பது, வெளிச்சம் சரியாக இல்லாததும் காரணமாகலாம்.

மேலும் ஹார்மோன் மாற்றங்கள், வயது மூப்புக்காலம், அலர்ஜி போன்ற மருத்துவ காரணங்களும் இதில் பங்கு வகிக்கின்றன.

இந்த நிலை நீண்ட நாட்கள் தொடருமானால், கண்களில் தாங்க முடியாத வலி, பார்வை குறைபாடு மற்றும் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும்.

கணினியில் பணிபுரிபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கம்யூட்டரில் அதிக நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்கள் தினமும் 6–8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீர்ச்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது நல்லது.

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்குத்தான் | Dry Eyes From Screen Time Causes Simple Remedies

கண்களை அடிக்கடி சிமிட்டுவது ஈரப்பதத்தை நிலைத்திருக்க செய்கின்றது. மேலும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு 20 வினாடி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

தேவையானவர்கள் Anti-glare கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *