பசறை-லுனுகல வீதியில், 15ஆம் மைல் கல்லுக்கு அருகில் ஒரு இறுதிச் சடங்கு வாகனம் (அமரர் ஊர்தி) வீதியை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதி, திங்கட்கிழமை (05) விபத்துக்கு உள்ளானது.
லுனுகலவில் இருந்து பசறை நோக்கி, சடலமின்றி சென்று கொண்டிருந்த இறுதி வாகனமே மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது எனத் தெரிவித்த .பசறை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.