களுத்துறை மாநகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன அடையாளம் தெரியாத ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை, நாகொட கம் சபா வீதியில் உள்ள ஒரு வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு களுத்துறை-பொம்புவல சாலையை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த வேட்பாளர் களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.