வாக்களிப்பு நிலையங்கள் தயார்…

ByEditor 2

May 5, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தும் பணிகள் திங்கட்கிழமை (5) காலை ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்,  13,759 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை (06) காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.  

வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 49 கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *