எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் நாளை காலை வேளையில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.