சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு ,படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக சனிக்கிழமை(03) அன்று மாலை 3 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.