இளைஞரொருவரை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ByEditor 2

May 3, 2025

கல்கிஸ்சை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி இரவு கல்கிஸ்சை, ஹுளுதாகொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

கொலைக்கான காரணம்

குறித்த இளைஞன் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சுவின் சகா என்றும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஏற்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கல்கிஸ்சை, புனித ரீட்டா வீதியில் வசித்த ஐம்பது வயதான நபரொருவர் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *